மழைக்காலங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முதலமைச்சர் ஒவ்வொரு துறையையும் ஆய்வு செய்து, நிதி நிலைமைக்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டிய பணிகளைத் திட்டமிட்டுச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
திமுக ஆட்சிக் காலத்தில் என்ன நடந்தது என்பதைக் கனிமொழி தான் கூற வேண்டும் என்றும், அப்போது என்னென்ன சம்பவங்கள் நடைபெற்றன என்பது அவருக்குத் தெரியும் என்றும் கூறினார். தற்போதைய தமிழக ஆட்சியைப் பொறுத்தவரையில் தூய்மையான, சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் முதலமைச்சர் செல்லும் இடங்களில் மக்கள் திரளாகக் கூடுவது, அவரை மக்கள் வரவேற்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்று கூறியுள்ளார்…


