தாய்நிலம் காத்த மருது பாண்டியர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய தலைவர்கள்.!

நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரைத் தியாகம் செய்த மருது சகோதரர்களின் நினைவு நாளையொட்டித் தலைவர்கள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் விடுத்துள்ள செய்தியில், விடுதலைக்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்த மருது சகோதரர்களின் நினைவு நாளில், அவர்தம் ஒப்பற்ற வீரத்தையும், அளப்பரிய தியாகத்தையும் போற்றி வீரவணக்கத்தைச் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்கு முன்னதாகவே, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, விடுதலை உணர்வைத் தமிழ் மண்ணில் விதைத்த மருது சகோதரர்களின் வீரவரலாறு தலைமுறைகளைக் கடந்தும் நிலைத்திருக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், உயிரைத் தியாகம் செய்து விடுதலை உணர்வை விதைத்த போராளிகளின் நினைவு நாளில் அவர்களுக்குத் தனது வீரவணக்கத்தைச் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவில், தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரையும் ஈந்த மாவீரர்கள் மருது சகோதரர்களின் நினைவு நாளில், அவர்களின் வீர வரலாற்றை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்போம் என்று கூறியுள்ளார். மேலும் வீர மருது சகோதரர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *