J. Jayalalithaa: ஜெயலலிதா நகைகளை ஏலம் விட மறுப்பு!

Advertisements

பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யபட்ட பல கிலோ எடையுள்ள தங்கம், வெள்ளி, வைர நகைகளை கர்நாடக அரசு ஏலம் விட வேண்டாம் மாறாக நகைகளை உடனடியாக தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நேற்று இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யபட்ட நகைகளை ஏலம் விட வேண்டும், நிறுவனங்களிடம் இருந்து பறிமுதல் செய்யபட்ட ஆயிரகணக்கான நிலங்களை ஏலம் விடவேண்டும் மற்றும் ஜெயலலிதா பெயரில் வங்கியில் உள்ள வைப்பு நிதிகளை வங்கிகள் கர்நாடக அரசுக்கு வழங்க வேண்டும் என்பது குறித்தான வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி ஜெயலலிதாவின் நகைகளை உடனடியாக கர்நாடக அரசு உடனடியாக தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த நகைகளை பெற்றுகொண்டு தமிழக அரசு உடனடியாக ரூ.5 கோடி பணத்தை கர்நாடக அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ஏலம் விடவேண்டிய நிலங்கள், ஜெயலலிதா பெயரில் வங்கி வைப்பு நிதி ஆகியவற்றை தற்போதைய சந்தை மதிப்பு நிலவரத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு நிதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *