மாயா உடன் சேர்ந்து சகுனி வேலையை ஸ்டார்ட் பண்ணிய பூர்ணிமா…!
மாயா உடன் சேர்ந்து சகுனி வேலையை ஸ்டார்ட் பண்ணிய பூர்ணிமா… சிக்கப்போவது யார். யார் தெரியுமா?
சுமால் பாஸ் வீட்டில் உள்ள மாயாவும், பூர்ணிமாவும் ஜோடியாக அமர்ந்து இந்த வார நாமினேஷன் பற்றிப் பேசிய புரோமோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இரண்டு வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்தச் சீசனில் முதல் வார இறுதியில் அனன்யா வெளியேற்றப்பட்டார். இதற்கு அடுத்த நாளே உடல் நிலை சரியில்லாததன் காரணமாகப் பவா செல்லதுரை தானாக வெளியேறினார். இதன் காரணமாக இரண்டாவது வாரம் எந்தப் போட்டியாளரும் எலிமினேட் செய்யப்படவில்லை.
இருப்பினும் கடைசி வரை எலிமினேஷன் இல்லை என்கிற சீக்ரெட்டை சொல்லாமல் சஸ்பென்ஸாக வைத்து ஹவுஸ்மேட்ஸ் வயிற்றில் புளியை கரைத்துவிட்டார் கமல்ஹாசன். குறிப்பாக மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு மரண பயத்தை காட்டிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். எலிமினேஷன் கார்டில் யார் பெயரும் இல்லாததை பார்த்த பின்னரே ஹவுஸ்மேட்ஸ் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதையடுத்து இந்த வாரத்திற்கான சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸை தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி மாயா, பூர்ணிமா, விஷ்ணு, பிரதீப் ஆண்டனி, வினுஷா, சரவண விக்ரம் ஆகியோரை தேர்வு செய்து சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் கேப்டன் யுகேந்திரன். மாயாவும் பூர்ணிமாவும் தனித்தனியாக இருந்தபோதே போட்டி போட்டுப் புரணி பேசி வந்தனர். தற்போது ஒன்றாக ஒரே வீட்டில் இருந்தால் சும்மா விடுவார்களா.
இந்த வார நாமினேஷனில் யாரை சிக்க வைக்கலாமென இருவரும் ஜோடியாக அமர்ந்து ஸ்கெட்ச் போட்ட புரோமோ காட்சிகள் தான் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ரவீனா, மணி சந்திரா, விசித்ரா ஆகியோரை தேர்வு செய்ய உள்ளதாக அவர்கள் பேசிய காட்சிகள் அடங்கிய புரோமோவை பார்த்த ரசிகர்கள், கமல்ஹாசன் திட்டியும் இவர்கள் திருந்தவில்லையா எனக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
#Day15 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 7 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/IfS347QWgq
— Vijay Television (@vijaytelevision) October 16, 2023
