Auto driver: ஓட ஓடத் துடிதுடிக்க வெட்டிச் சாய்த்த கும்பல்!  

ஆட்டோ டிரைவரை ஓட ஓடத் துடிதுடிக்க  வெட்டிச் சாய்த்த கும்பல்!

சென்னை ஓட்டேரியில் ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜிசுல்லா.  ஆட்டோ ஓட்டுநர். இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஓட்டேரியில் உள்ள தனது உறவினர் வீட்டின் அஜிசுல்லா இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், அஜிசுல்லாலின் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவி கொலை முயன்றபோது உறவினர் வீட்டிற்குள் நுழைந்து தப்ப முயன்றார்.

ஆனால் அந்தக் கும்பல் அவரை விடாமல் வீட்டிலிருந்து வெளியே இழுத்து போட்டுச் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அஜிசுல்லா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். பின்னர், கொலை செய்யப்பட்ட அஜிசுல்லா உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ஆட்டோ ஓட்டுனர் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *