Attur Bike Thieves: வாகனத்தை திருடும் சிசிடிவி காட்சி!

ஆத்தூர் காமராஜனார் சாலையில் பட்டப் பகலில் இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகிவருகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். தனியார் பூச்சி மருந்து கம்பெனியில் பயிர் ஆய்வு மேற்பார்வையாளராக உள்ளார்.இவர் ஆத்தூர் மகளிர் காவல் நிலையம் எதிரில் உள்ள தனியார் பூச்சி மருந்துகடைக்கு வருவது வழக்கம். வழக்கம் போல் அவர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடையின் உள்ளே சென்று உரிமையாளரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் டிப் டாப்பாக வந்த மர்ம நபர்கள் வெங்கடேசன் இருசக்கர வாகனத்தை பட்டப்பகலில் திருடி சென்றுள்ளனர். மேலும் தனது சொந்த வாகனத்தை போல் எவ்வித பதட்டமும் இல்லாமல் சாவகாசமாக திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்தகாட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், போக்குவரத்து காவல் நிலையம் உள்ளிட்டவை அமைந்துள்ள இப்பகுதியில் பட்டப் பகலில் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *