பகல்காமில் கொல்லப்பட்டோரின் உடல்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி..!

Advertisements

பகல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டோரின் உடல்கள் அவரவர் ஊர்களுக்கு அனுப்பப்படுவதற்காக ஸ்ரீநகரில் வைக்கப்பட்டுள்ளன.அந்த உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பகல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆறுதல் தெரிவித்தார்.படுகொலை நிகழ்ந்த இடத்துக்கும் அமித் ஷா சென்று பார்வையிட்டார்.கர்நாடகத்தின் சிவமோகாவைச் சேர்ந்த மஞ்சுநாத் பகல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதை அறிந்த கர்நாடக அமைச்சர் மது பங்காரப்பா, சிவமோக்காவுக்குச் சென்று மஞ்சுநாத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

கொடிய படுகொலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தாரிக் கரா ஆகியோரிடம் கேட்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொல்லப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீதிவழங்கக் காங்கிரஸ் முழு ஆதரவையும் அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.பகல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டோருக்கு அரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி மௌன அஞ்சலி செலுத்தினார்.

பகல்காமில் கொல்லப்பட்டவர்களில் மூவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இப்படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பயங்கரவாதம் முழுமையாக ஒடுக்கப்பட்டுள்ள நிலைமையில் பகல்காம் படுகொலைக்குப் பின்னால் வெளிநாட்டுத் தூண்டுதல் இருக்கும் என்று தெலங்கானா பாஜக தலைவர் ராமச்சந்திர ராவ் தெரிவித்துள்ளார்.
பகல்காம் படுகொலைக்கு ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளை அரசு தண்டிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகளைச் சுட்டுக்கொன்றிருப்பது ஒரு படுகொலை என்று ஓவைசி குறிப்பிட்டார்.பகல்காம் படுகொலையைக் கண்டித்தால் மட்டும் போதாது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.பகல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டோருக்கு லக்னோவில் உள்ள பள்ளியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பகல்காம் படுகொலையைக் கண்டித்து ஜம்முவில் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *