தமிழக சட்டமன்ற துணை சபாநாயகராக ரவி ஷங்கர் போட்டியின்றி தேர்வு..!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, புதிய சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக ரவி ஷங்கர் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணை சபாநாயகர் பதவிக்கு ரவி ஷங்கர் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், வேறு யாரும் போட்டியிடாததால் அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது சபாநாயகர் முன்னிலையில் இவர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.இவர் தற்போதைய ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) முக்கிய உறுப்பினர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

இந்நிலையில் , இதற்கு முன்னதாக 16-வது சட்டமன்றத்தில் (2021-2026) கு. பிச்சண்டி துணை சபாநாயகராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது..

TamilNadu #TNASsembly #DeputySpeaker #RaviShankar #TVK #Vijay #TamilNews #AssemblyElection2026 #BreakingNews #PoliticsTamilNadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *