சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மேக்ஸ்வெல் ஓய்வு!

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். 38 வயதான மேக்ஸ்வெல், 149 ஒருநாள் போட்டிகள், 130 20 ஓவர் போட்டிகள் மற்றும் ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்குப் பல மறக்க முடியாத வெற்றிகளைப் பெற்றுத் தந்த அவர், 2015 ஒருநாள் உலகக் கோப்பை, 2021 20 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பையை அணியிலும் இடம் பெற்றிருந்தார்.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பேஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாட உள்ளார். அந்த அணியுடனான அவரது ஒப்பந்தம் 2027-28 ஆம் ஆண்டு சீசன் முடியும் வரை நீடிக்கிறது. மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் 20 ஓவர் பிரான்சைஸ் கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *