Asia Cup 2023: இந்திய அபார வெற்றி!

Advertisements

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது…

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 356 ரன்கள் எடுத்திருந்தது.

357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி, 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்து 228 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி 122 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

அவர் 99 ரன்னை எட்டியபோது சர்வதேச ஒருநாள் போட்டியில் 13,000 ரன்களை கடந்த 5-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 34 வயதான விராட்கோலி, இதுவரை 278 ஒருநாள் போட்டியில் விளையாடி 47 சதம், 65 அரைசதத்துடன் 13,024 ரன்கள் குவித்துள்ளார்.
சூப்பர் 4 சுற்றில் முதல் வெற்றியைப் பெற்றுள்ள இந்தியா அடுத்து இலங்கையுடன் இன்று மோதுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *