Artificial intelligence: இந்தியா உட்பட 28 நாடுகள் கையெழுத்து!

சர்வதேச அளவில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு மசோதாவில் இந்தியா உட்பட 28 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் ஜினா ரெய்மாண்டோ, இங்கிலாந்து இன்னோவேஷன் தொழில்நுட்பத்தின் செயலாளர் மைக்கேல் டோனலிம், சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப செயலாளர் ஆகியோர் முன்னிலையில் கடந்த நவம்பர் 1-ஆம் தேதி செயற்கை  நுண்ணறிவின் தீமைகள் குறித்தான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இங்கிலாந்தில் செயற்கை  நுண்ணறிவு எதிர்ப்புக்கான சர்வதேச கூட்டத்தில் இந்தியாவும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளது. இதில்  இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 28 நாடுகள் இணைந்து  AI குறித்தான தீங்கிலிருந்து மீளுதல், பாதுகாப்பான முறைகள், வேகமாக வளர்ந்து வரும் AI எவ்வாறு ஒட்டுமொத்த சமுதாயத்தையே மாற்றும் மற்றும் உலகையே அச்சுறுத்தும் இதனை தடுப்பது எப்படி எனவும், எலன் மஸ்க் மற்றும் ChatGPT ஆகியோரிடமும் கருத்து கேட்டுள்ளது.

இதனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வரவேற்றுள்ளார். வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பு அளிப்பதோடு அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் எனவும் இவற்றை  ஆரம்பத்திலேயே நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்  எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *