Arif Mohammed Khan: ஆளுநர், முதல் மந்திரி இடையே மீண்டும் மோதல்!

Advertisements

எனக்கு எதிராகக் கருப்பு கொடி போராட்டத்தை நடத்துமாறு இந்திய மாணவர் சங்கத்தை முதல் மந்திரி பினராயி விஜயன்தான் கூறுகிறாரென ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், ஆளும் இடது சாரி கூட்டணி அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஆளுநர் செல்லும் இடங்களில் அவருக்கு எதிராக இந்திய மாணவர் கூட்டமைப்பு கருப்பு கொடி போராட்டங்களை நடத்தி வருகிறது.

பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநர், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். வேட்பாளர்களைக் கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குத் தள்ளுவதாக இந்திய மாணவர் அமைப்புக் குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறுகையில், எனக்கு எதிராகக் கருப்பு கொடி போராட்டத்தை நடத்துமாறு இந்திய மாணவர் சங்கத்தை முதல் மந்திரி பினராயி விஜயன்தான் கூறுகிறார்.

அவர்கள் என் அருகில் வராமல் இருக்க காவல்துறையைப் பயன்படுத்துகிறார். என்னைத் தொட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று அவருக்குத் தெரியும். இனி நான் பயப்பட மாட்டேன் என்பதை பினராயி விஜயன் உணர வேண்டும். அவர் அனைவரையும் பலி கொடுக்க விரும்புகிறார். காவல்துறையினரை துன்புறுத்துவதும், இளைஞர்களைச் சுரண்டுவதும் எனக்கு வருத்தம் அளிக்கிறது எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *