
த.வெ.க.வையோ, விஜய்யையோ காக்க வேண்டிய கடமை பாஜகவுக்கு கிடையாது. த.வெ.க. மீது நிச்சயம் தவறு இருக்கிறது. ஆனால், விஜய்யை நீங்கள் குற்றவாளியாக்க முடியாது” என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “கரூர் பொறுத்தவரை விஜய்யை ஏ1 என அவர் மீது வழக்கு பதிவு செய்திருந்தால், அந்த வழக்கு நிற்காது. அல்லு அர்ஜுன் வழக்கிலும் இதேதான் நடந்தது.
இவர்களின் அரசியல் ஆசைக்காக வேண்டுமென்றால் ஒரு நாள் கைது செய்து சிறையில் அடைக்கலாம். ஆனால், மறுநாள் காலை ஜாமீன் கிடைத்து வெளியே வந்துவிடலாம்.
எம்.பி. திருமாவளவன், தனது கட்சியில் இருந்து பெரும்பான்மையானோர் வெவ்வேறு கட்சிக்கு செல்வதை பார்க்கிறார். அந்த வயிற்றெரிச்சலில் தான் திடீரென வெளியே வந்து விஜய்யையும், மத்திய அரசையும் தாக்கி பேசுகிறார்.த.வெ.க.வையோ, விஜய்யையோ காக்க வேண்டிய கடமை பாஜகவுக்கு கிடையாது.
த.வெ.க. மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர். மீதே நடவடிக்கை எடுக்காமல், அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தீவிர புரட்சி பற்றி பேசுகிறார் அவர்மீது நடவடிக்கை எடுக்காமல், பாஜக விஜய்யை காக்கிறது எனப் பேச திமுகவுக்கு என்ன உரிமை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
