Amit Shah:பா.ஜ., ஆட்சியில் விவசாய பட்ஜெட் 5 மடங்கு அதிகரிப்பு!

Advertisements

சண்டிகர்: பா.ஜ., ஆட்சியில் விவசாய பட்ஜெட் 5 மடங்கு அதிகரித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் அமித்ஷா பேசியதாவது: 10 ஆண்டுகளில் ஹரியானா மாநிலத்தில் வளர்ச்சியை உருவாக்கப் பா.ஜ., பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளன. முந்தைய காலங்களில், ஹரியானா மாநிலத்தில் மோதல் அதிகம் நடந்தது. ஊழலையும், குடும்ப அரசியலையும் ஒழித்தோம்.

அன்பு

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா மாநில வளர்ச்சிக்காக ரூ.41 ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்கப்பட்டது. பா.ஜ., ஆட்சியில் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மோடியால் மட்டுமே நாட்டை முழு வளர்ச்சியடைந்து, தன்னிறைவு பெற்ற, பாதுகாப்பான, வளமான, கல்வி மற்றும் தொழில்நுட்பம் கொண்டதாக மாற்ற முடியும்.

விவசாய பட்ஜெட்

பிரதமர் மோடியுடன் நான் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். அவர் குஜராத்தில் இருந்தபோது, ஹரியானாவைப் பற்றிக் கவலைப்பட்டார். இப்போது அவர் டில்லியில் இருக்கும்போது, ஹரியானா மாநிலம்மீது தனிப்பற்றும் அன்பும் வைத்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் விவசாய பட்ஜெட் ரூ.22,000 கோடியாக இருந்தது. ஆனால் 10 ஆண்டுகளில் பா.ஜ., ஆட்சியில் ரூ.22,000 கோடியிலிருந்து ரூ.1,25,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாய பட்ஜெட் 5 மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *