
நடிகை ஆலியா பட் சொந்தமாக ஆடை நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறாராம். அந்த நிறுவனத்தின் மதிப்பு மட்டும் ரூ.150 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது…
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த ஆலியா பட் அவரைக் கடந்தாண்டு கரம்பிடித்தார்.

இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் ஆலியா பட், இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ராக்கி அவுர் ராணி கி கஹானி என்கிற திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்தது.

இதுதவிர அண்மையில் அறிவிக்கப்பட்ட 69-வது தேசிய விருதுகளில் நடிகை ஆலியா பட்டிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. கங்குபாய் கத்தியவாடி திரைப்படத்திற்காக அவருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டது. அவருக்குக் கிடைத்துள்ள முதல் தேசிய விருது இதுவாகும்.
இப்படி சினிமாவில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் ஆலியா பட்டிற்கு உள்ள சொத்து மதிப்பு மட்டும் ரூ.560 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. இவருக்கு மும்பையில் மட்டும் பல கோடி மதிப்புள்ள 2 சொகுசு பங்களா உள்ளதாம். இதுதவிர லண்டனிலும் ஒரு சொகுசு வீடு சொந்தமாக வைத்திருக்கிறாராம் ஆலியா பட்.

இவர் ஒரு படத்துக்கு ரூ.20 கோடிவரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். சினிமாவில் வரும் வருமானத்தை வைத்து அவருக்கு இவ்வளவு சொத்து கிடைக்கவில்லை. அவர் பிசினஸ் மூலம் தான் கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறாராம்.

நடிகை ஆலியா பட் சொந்தமாக ஆடை நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறாராம். அந்த நிறுவனத்தின் மதிப்பு மட்டும் ரூ.150 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. அந்நிறுவனத்தின் மூலம் மாதந்தோறும் பல கோடி வருமானம் ஈட்டி வருகிறாராம் ஆலியா. அந்நிறுவனத்தில் தயாராகும் ஆடைகளை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து நல்ல லாபம் பார்த்து வருகிறார் ஆலியா பட்.


