Ajith Kumar: சென்னை திரும்பினார்!

Advertisements

விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சிறிய இடைவெளிக்காக நடிகர் அஜித் சென்னை திரும்பியுள்ளார்.

சென்னை: இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலேயே நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது.

இந்நிலையில் நடிகர் அஜித் இன்று சென்னை திரும்பியுள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சிறிய இடைவெளிக்காக அஜித் சென்னை திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.


சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் வெளியேறும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *