
கனி மார்க்கெட் கடை ஒதுக்கீட்டு குழுவில் அதிமுக உறுப்பினர்களை சேர்க்காதை கண்டித்து ஈரோடு மாநகராட்சி அவசர கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட நேதாஜி ரோட்டில் புதிதாக கனி மார்க்கெட் பகுதியில் புதிய கட்டிடத்தில் 260 கடைகள் கட்டப்பட்டுள்ளது.இதில் பழையதாக இருந்த கட்டிடத்தில் கடை வைத்துள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் கடைகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததையடுத்து இது பற்றி பரிசினை செய்வதற்கு குழு அமைக்கப்பட்டது.
இதில் மாநகராட்சி உறுப்பினர்கள் நான்கு பேரும் மற்றும் அதிகாரிகள் கொண்ட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு பரிசினை செய்யப்பட்டது. இதில் 113 கடைகள் நபர்களுக்கு மட்டும் உரிய வரிகள் செலுத்திய அனுமதி கடிதம் பெற்றுள்ளது. இந்தநிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து மாநகராட்சி அவசர கூட்டம் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கூட்ட அரங்கில் மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது.அப்போது அதிமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சி மன்ற தலைவர் தங்கமுத்து தலைமையில் உறுப்பினர்கள் ஜெகதீசன் ,தங்கவேல் உட்பட ஆறு பேர் கூட்ட அரங்கத்தில் எங்களுடைய கட்சிக்கு குழுவில் எங்கள் உறுப்பினர்களை சேர்க்காதை கண்டித்து வெளியில் நடப்பு செய்தனர்.



