AIADMK Manifesto: பெண்களுக்கு மாதம் ரூ.3,000 – அ.தி.மு.க தேர்தல் அறிக்கை!

Advertisements

மகளிர் உரிமை தொகையாக 3ஆயிரம் ரூபாய் வழங்கபட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம் உள்ளிட்ட 133 வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பாக வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்தத் தேர்தல் அறிக்கையில், 133 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது. அதில் உள்ள மக்கிய அம்சங்கள் இதோ.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயம்புத்தூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்

மகளிர்க்கு மாதம் 3000 வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்

சென்னை மெட்ரோ ரயிலைச் செங்கல்பட்டு வரை நீட்டிக்க வலியுறுத்தப்படும்

கிளாம்பாக்கத்திலிருந்து ஒரகடம் வரை மெட்ரோ ரயில் இயக்க வலியுறுத்துவோம்

ராமநாதபுரத்தில் விமான நிலைய அமைக்க வலியுறுத்துவோம்

மத்திய அரசு அறிவித்த ஓசூர் விமான நிலையத்தில் விரைந்து முடித்திட வலியுறுத்துவோம்

நாகை திருவாரூர் உள்ளடக்கிய ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்க வலியுறுத்துவோம்

உச்சநீதிமன்ற கிளையைச் சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்

ஆளுநர் பதவி நியமிக்கும்போது மாநில அரசின் கருத்துகளைக் கேட்க வேண்டும்

நாடாளுமன்ற குடிகாரக் கூட்டத்தொகை சென்னையில் நடத்த வேண்டும்

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்

நீட்டுக்கு பதிலாக மாற்றுத் தேர்வு முறை தேவை

நெடுஞ்சாலை சுங்கசாவடிகளை அகற்ற வேண்டும்

வழக்காடு மொழியாகத் தமிழ் இடம்பெற வேண்டும்

ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு 50% கட்டண சலுகை அளிக்கப்பட்டு வந்தது தற்போது அது

நிறுத்தப்பட்டுள்ளது மீண்டும் சலுகை வழங்கிட வேண்டும்

நெகிழிப் பொருட்களுக்கு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும்

விவசாயிகளுக்கு ஊதியமாக மாதம் 5 ஆயிரம் வழங்கும் திட்டத்தை விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *