
அதிமுக கொடி சின்னங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் மீண்டும் பயன்படுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அதிமுக நிர்வாகி சுத்துக்கேணி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாநில செயலாளர் அன்பழகன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்பழகன்.அதிமுக கொடி மற்றும் சின்னங்களை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றமே கூறிய நிலையில் மீண்டும் அதை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்துவது என்பது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல் என்றும், அதிமுக குறித்தும், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் குறித்தும் விமர்சிக்க ஓபிஎஸ்-க்கு தகுதியும், அருகதையும் இல்லை என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் என அனைவரும் திரளாகக் கலந்து கொண்டனர்.


