Admiral Radhakrishnan Hari Kumar: சீனாவுக்கு இணையான பாதுகாப்பை மேம்படுத்தும் இந்தியா!

Advertisements

இந்தியப் பெருங்கடல் எல்லையில் பலத்தை அதிகரிக்கும் சீனா..!  தனது கடல்சார் களத்தில் தன்னை மேம்படுத்திக் கொள்ள சீனா முனைப்பு காட்டி வருகிறது.

இந்தியப்பெருங்கடல் எல்லையில் சீனா கடற்படை பலத்தை மேம்படுத்தி பல படுத்தியுள்ளது. சீனா பாகிஸ்தானுடன் சேர்ந்து தன்னுடைய கடல்சார் களத்தை வலுவுள்ளதாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதனால் இந்தியாவும்  கடல்சார் களத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான  ஒத்துழைப்பை எதிர்கொள்ள  தனது திறனை மேம்படுத்த திட்டங்களை தொடர்ந்து புதுப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார்  தெரிவித்துள்ளார்.

இதுவரை 360-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள், மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவைகளைக் கொண்டுள்ளது சீனா. அதனால் இந்தியாவும் ஆறு முதல் எட்டு போர்க்கப்பல்கள்  எப்போதும் தயார் நிலையில் கடற்படை கடல் எல்லையில் வைத்துள்ளதாக  கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *