
தனது சகோதரரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காகப் பாரிஸில் இருந்து மும்பை திரும்பினார் ஜான்வி கபூர்.
மும்பை:நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்துப் பாராட்டுகளைப் பெற்றார்.
இந்த நிலையில், நடிகர் ஜான்வி கபூர் தனது சகோதரர் அர்ஜுன் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு பாரிஸில் இருந்து மும்பை திரும்பினார். அப்போது விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த ஜான்வி கபூரிடம் ரசிகர்கள் செல்பி எடுப்பதற்காக அவரைச் சூழ்ந்தனர். அப்போது ஜான்வி கபூர் அசவுகரிகமாகக் காணப்பட்டார்.
பின்னர் காருக்கு அருகே சென்ற ஜான்வி கபூரிடம் ரசிகர்களில் ஒருவர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது “இது என்னுடைய பிறந்தநாள் இல்லை” என்று ஜான்வி அவருக்குப் பதிலளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.



