
Actress Kajal Agarwal : மும்பையில் பிறந்து ஹிந்தி திரைப்படங்களில் நடித்துத் தனது கலை உலக பயணத்தைத் தொடங்கிய காஜல் அகர்வால் தற்பொழுது கமலுடன் இந்தியன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தமிழில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான பிரபல நடிகர் பரத்தின் “பழனி” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது தமிழ் திரை உலக பயணத்தைத் தொடங்கினார் காஜல் அகர்வால்.
தளபதி விஜய், தல அஜித் மற்றும் தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள நடிகை காஜல் அகர்வால், இறுதியாகத் தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “கருங்காப்பியம்” என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாகத் திரைப்படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் தற்பொழுது தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார்.
அதேபோலச் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களுடைய நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் காஜல் அகர்வால் நடிக்கவில்லை என்றும், இந்தியாவின் படத்தின் மூன்றாம் பக்கத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.




