Actress Anjali: திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய அஞ்சலி!

Advertisements

நடிகர் ஜெய்யின் முன்னாள் காதலியும், நடிகையுமான அஞ்சலி, தனது திருமணம்குறித்து பரவிய வதந்திகள்குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசி உள்ளார்.

ராம் இயக்கிய கற்றது தமிழ் படம்மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் அஞ்சலி. இதையடுத்து வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான அங்காடி தெருத் திரைப்படம் அஞ்சலிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் எங்கேயும் எப்போதும், அஜித்துடன் மங்காத்தா, சுந்தர் சி இயக்கிய கலகலப்பு, கார்த்திக் சுப்புராஜின் இறைவியெனத் தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்துப் பிரபலமானார் அஞ்சலி.

ஒருகட்டத்தில் நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளார்கள் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. ஆனால் திடீரென ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நடிகர் ஜெய்யை பிரேக் அப்செய்து பிரிந்தார் அஞ்சலி. ஒருகட்டத்தில் உடல் எடை அதிகரித்ததால் சினிமாவை விட்டே விலகினார் அஞ்சலி. அதன்பின்னர் கடுமையாக உடற்பயிற்சி செய்து மீண்டும் ஸ்லிம்மான அஞ்சலி, அப்படியே கிளாமர் ஹீரோயினாகவும் மாறினார்.

அதுமட்டுமின்றி சித்தியின் கட்டுப்பாட்டில் இருந்த நடிகை அஞ்சலி அவரால் பல்வேறு கொடுமைகளை அனுபவித்ததாகச் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் அதிலிருந்து விடுபட்டு ஆந்திராவில் செட்டிலான அஞ்சலிக்கு அங்குள்ள தயாரிப்பாளர்மூலம் சினிமா வாய்ப்புகளும் குவியத் தொடங்கின. தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நாயகனாக நடித்து வரும் கேம்சேஞ்சர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அஞ்சலி.

தற்போது டோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் அஞ்சலி, தன்னைப் பற்றிய திருமண வதந்திகள்பற்றித் தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். என்னைப் பற்றி என்ன எழுத வேண்டும், யாருடன் இணைத்து எழுத வேண்டும் என்று அவர்களே முடிவு செய்து எழுதுகிறார்கள்.

முதலில் நடிகர் ஜெய்யை காதலித்ததாகச் செய்தி வந்தது. பின்னர் தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனதாகச் சொல்லப்பட்டது. எனக்கே தெரியாமல் எனக்குத் திருமணம் ஆனதை நினைத்து நான் சிரித்தேன். நடிகை என்பதால் அவர்களைப் பற்றி வாய்க்கு வந்தபடி எழுதுகிறார்கள்” என அஞ்சலி அதிருப்தி தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *