நடிகர் சிவாஜியின் நினைவு தினம் ! அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ரசிகர்கள் !

Advertisements

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் 22வது நினைவு தினத்தை முன்னிட்டு அடையாறு மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு குடும்ப உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 22வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது வருகிறது.

அவரின் நினைவுதினத்தை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளிலிருந்து அவரது ரசிகர்கள் மணிமண்டபத்திற்கு வருகை தந்து அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், அவரது மகனோடு வந்து மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சத்யமூர்த்திபவனில் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சிவாஜி கணேசனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நடிகர் சிவாஜியின் புகழை போற்றும் வகையில் சென்னையில் சில திரையரங்குகளில் “வசந்த மாளிகை” திரைப்படம் இன்று மாலை 3 மணியளவில் திரையிடப்பட உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *