Sexual Harassment: வாலிபர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு!

Advertisements

தாராபுரம்: சிறுமியை மிரட்டிப் பாலியல் பலாத்காரம் செய்த  வழக்கில் தொடர்புடைய சரவணன் என்ற நபரைப் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம், மூலனுார், எரகாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 65, விவசாயி. இவர் 16 வயது சிறுமியை மிரட்டிப் பாலியல் பலாத்காரம் செய்தார்; சிறுமி கர்ப்பமானார்.இதில் ராஜேந்திரன், தாராபுரம் அரசு
மருத்துவமனையில் தலைமை நர்சாக உள்ள உஷாராணி, 52,என்பவரை அணுகி, சிறுமியின் கருவைக் கலைக்க செய்தார். வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும், சிறுமியை ராஜேந்திரன் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த, மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமி, தாராபுரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். ‘போக்சோ’ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திரன், உஷாராணி தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரையும் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ராஜேந்திரனுக்கு உடந்தையாக இருந்த சரவணன் என்பவர் குழந்தைகளின் பெற்றோருக்குக் கொடுப்பதாகக் கூறி ராஜேந்திரனிடம் பேரம் பேசி ரூ 13 லட்சம்  பணத்தை அபகரித்துத் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய இவரைப் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில்

தாராபுரம் காவல் நிலைய பகுதியில் ஒரு வீட்டில் மறைந்திருந்த சரவணனை பிடித்த போலீசார் அவர்மீது பண மோசடி மற்றும் போக்சோ வழக்கு என இரு  வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *