
பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ரியோ கிராண்டே டு சல் என்ற நகரம், தற்போது வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. இந்த வெள்ளத்தில் தற்போது சுமார் 90 பேர் உயிரிழந்திருக்கலாமெனக் கூறப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகல் தொடர்ந்து நடைப்பெற்று வந்தாலும் நிலைமை கைமீறி போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரேசிலில், வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் மக்கள் ரோடுகளில் தங்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மக்கள், பிரேசில் நாட்டின் தலைநகரமான எல்டோராடோ டு சல் எனும் இடத்திலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் பல பேர் தங்கியிருக்கின்றனர். இதுகுறித்து கூறும் அவர்கள், தாங்கள் அனைவரும் மூன்று நாட்களாகச் சாப்பிட உணவு இல்லாமல் சிரமப்படுவதாகவும், யாரென்றே தெரியாதவர்களுடன் தங்கியிருப்பதாகவும் தங்களின் குடும்பத்தினர் எங்கிருக்கின்றனர் என்பதே தெரியவில்லை என்றும் கூறியிருக்கின்றனர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வந்தாலும், கட்டுக்கடங்கா வெள்ள நீரால் அந்தப் பணிகளும் தற்போது தடைப்பட்டு வருகிறது.
மக்களை மீட்பதற்காக, மீட்பு படையினர் சிறு சிறு படகுகளில் பிரேசில் நகரின் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட தெருக்களில் சுற்றி வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் அவர்கள் இந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் பலர், அவரவர்களின் இல்லங்களில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதன் படி, 90 பேர் உயிரிழந்துள்ளதாகவ்ம், 4 பேரின் நிலைகுறித்து தெரியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மக்களுக்கு உதவி எண்கள்குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது. தற்போது வரை, 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடு வாசலின்றி ரோட்டில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

