353 எம்.பி.க்கள் 1,654 எம்.எல்.ஏ.க்கள் ; பாஜக தேசமாகும் இந்தியா..!

Advertisements
இந்தியா என்பது இந்து தேசம். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது இந்துக்களின் நாடு என ஆர் எஸ் எஸ் அமைப்பு தலைவர் மோகன் பகாவத் பரபரப்பாக பேசிய நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவிலும் 353 எம்பிக்கள் 1654 எம்எல்ஏக்கள் என உலகிலேயே அதிக எம்எல்ஏக்கள் எம்பிக்களை கொண்ட மிகப்பெரிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உருவெடுத்து இருக்கிறது .
இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத  அளவுக்கு பீகார் தேர்தலுக்குப் பிறகு இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 1654 ஆக உயர்ந்திருக்கிறது. தற்பொழுது உலகிலேயே மிக அதிக மக்கள் பிரதிநிதிகளை கொண்ட கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உருவெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும் .
1950 ஆம் ஆண்டு கால கட்டங்களில் ஜன சங்கமமாக இருந்த அமைப்பு 1980ல் பாரதிய ஜனதா கட்சியாக உருவெடுத்தது. அப்போது இந்தியாவின் மிகப் பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி இருந்தது . அப்போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஒரு சில எம்பிக்கள் ஒரு சில எம்எல்ஏக்களை பெறுவதற்கே பாரதிய ஜனதா கட்சி அரும்பாடுபட்டது .
மிகப்பெரிய போராட்டங்களுக்கு மத்தியில் 1990க்கு பிறகு , இந்திய அளவில் பாஜகவின் வளர்ச்சி அபரி மிதமானது . தற்போதைய சூழ்நிலையில் மக்களவையில் 240 எம்பிக்களும் ராஜ்யசபாவில் 103 எம்பிக்களும் ஆக மொத்தம் 343 எம்பிக்கள் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார்கள். அதே சமயம் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமாக 126 எம்பிக்கள் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது .
ஜம்மு காஷ்மீரில் தொடங்கி தமிழ்நாடு வரை இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு 1654 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் . கடந்த 2014 ஆம் ஆண்டில் 1035 ஆக இருந்த பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 2015இல் 997 ஆக சரிந்தது  . அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் 50 முதல் 100 வரை பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது .
2023ல் 1441 ஆகவும் 2024ல் 1588 ஆகவும் இருந்த பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை இப்பொழுது 2025 ஆம் ஆண்டில் 1654 ஆக உயர்ந்திருக்கிறது.
அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு 258 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.  மத்திய பிரதேசத்தில் 165 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் குஜராத்தில் 162 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் டெல்லியில் 48 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் .
சத்தீஸ்கர், அசாம், கோவா, ஹரியானா, மகாராஷ்டிரா ,உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஒடிசா , திரிபுரா, உத்தரகாண்ட் , என ஏராளமான வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தான் ஆளும் கட்சியாக இருக்கிறது, இது தவிர பீகார் மாநிலத்திலும் ஆந்திர மாநிலத்திலும் புதுச்சேரியிலும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது ,
தற்பொழுது,  இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது . ஒரு காலத்தில் அகில இந்திய அளவில் மிகப்பெரிய கட்சியாக திகழ்ந்த காங்கிரஸ் கட்சிக்கு தற்பொழுது பாதி அளவு கூட எம்எல்ஏக்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் தற்பொழுது நாடு முழுவதும் 640 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி மெது மெதுவாக தனது பலத்தை இழந்து வருகிறது . பாரதிய ஜனதா கட்சியால் அதிகம் கால் ஊன்ற முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மாநிலம் தான் . தமிழ்நாடு கேரளா தவிர கிட்டத்தட்ட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களை பாரதிய ஜனதா கட்சி எட்டிப் பிடித்து விட்டது.
எம்பிக்கள் எம்எல்ஏக்கள் தவிர நாடு முழுவதும் மேயர்கள் கவுன்சிலர்கள் என பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்து இருக்கிறது . கிட்டத்தட்ட 17 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கிறது.  அங்கு பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வைத்து 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது.  பாரதிய ஜனதா கட்சி மட்டும் 89 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது . தற்பொழுது பீகார் பாணியிலேயே தமிழ்நாட்டிலும் தேர்தலை நடத்துவதற்கு பிஜேபி பின்னணியில் சதி வேலை நடப்பதாக பேசப்படுகிறது .
இந்திரா காந்தி காலத்தில் மிகவும் மோசமாக இருந்த பாரதிய ஜனதா கட்சி இப்பொழுது உலகிலேயே மிக அதிக மக்கள் பிரதிநிதிகளை கொண்ட கட்சியாக உருவெடுத்திருக்கிறது . தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் மிக மெதுவாக தனது பலத்தை இழந்து வருகிறது.  அதேசமயம் பாரதிய ஜனதா கட்சி முக்கியத்துவம் பெற ஆரம்பித்திருக்கிறது என்பது முக்கிய செய்தி ஆகும் .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *