13 Year Old Girl Pregnant: கோவையில் கொடூரம்!

Advertisements

கோவை மாநகரமே கொதித்தெழுந்துள்ளது. ஒரு 13 வயது சிறுமி 12 வயது சிறுவனால் கர்ப்பமான சம்பவத்தால் கோவையில் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த 13 வயது சிறுமி, கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு பக்கத்திலேயே, பீகார் மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுவனும் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சிறுமியின் வீட்டில் யாருமில்லாத போது, அங்கு சென்ற சிறுவன், சிறுமியை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமல்ல, இதை பற்றி யார்கிட்டயாவது சொன்னால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்.

இதற்கு நடுவில், சிறுமிக்கு திடீர்னு உடல் நலக்குறைவு ஏற்பட்டு விட்டது.. அதனால், அவரை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.

டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, சிறுமி கர்ப்பமாக இருப்பதாக சொன்னார்கள். இதைக்கேட்டு அதிர்ந்துபோன சிறுமியின் பெற்றோர், மகளிடம் விசாரித்திருக்கிறார்கள். அப்போதுதான், 12 வயது சிறுவன் தான் இதற்கெல்லாம் காரணம் என்பது தெரிய வந்தது. இதற்கு பிறகு, ஆத்திரமடைந்த பெற்றோர், கருமத்தம்பட்டி மகளிர் போலீசில் சிறுவனின் மீது புகார் தந்தனர்..

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் , சிறுவனை கைது செய்து போக்சோ கோர்ர்ட்டில் ஆஜா்படுத்தினர். இறுதியில், சிறுவன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க நீதிபதி குலசேகரன் உத்தவிட்டதையடுத்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் அடைக்கப்பட்டிருக்கிறார்.. இந்த சம்பவம் இப்போது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

பெண் குழந்தைகளை எப்படி வளர்ப்பது ? எப்படி பாதுகாப்பு கொடுப்பது ? பெண் பிள்ளைகளை வளர்ப்பது ஒரு சவாலாகவே உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *