
CinemaUpdates :
தமிழில் கமல்ஹாசன், அஜித்குமார், விக்ரம் உள்ளிட்ட முன்னணி கதாநாயர்களுடன் நடித்துள்ள கிரண், சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே காணாமல் போனார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமூக வலைத்தளம்மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்து ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இப்போது விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கிரண் அளித்துள்ள பேட்டியில், “தான் ஒருவரை பைத்தியமாகக் காதலித்தேன் என்றும். அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். ஆனால் அந்தக் காதல் தோல்வியில் முடிந்ததாகக் கூறியுள்ளார்.

மேலும் இதனால் மனம் உடைந்து போனதாகவும் சினிமாவில் சில காலம் தான் இல்லாமல் இருந்ததற்கு எனது காதல் தோல்வியே காரணம் எனக் குறிப்பிட்ட கிரண். அப்போது சரியாக இருந்திருந்தால் நல்ல இடத்துக்குச் சென்று இருப்பேன். ஆனால் தவறான முடிவு எடுத்ததால் வாழ்க்கை நாசமானதாகத் தெரிவித்தார். மேலும் தற்போது நடிக்க விரும்புகிறேன். ஆனால் யாரும் அழைக்கவில்லை என்று வேதனையோடு கூறினார்.

