இந்திரா நகர் பறக்கும் ரயில் நிலையத்தில் இளம் பெண்ணிடம் செல்போன் பறித்து உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisements

சென்னை இந்திராநகர் ரயில் நிலையம் அருகே ரயிலில் பயணம் செய்த பிரீத்தி என்ற பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்றதால், ரயிலில் இருந்து தவறி விழுந்த ப்ரீத்தி சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளார். அவருக்கு வயது 23

Advertisements

கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தவர் ப்ரித்தி. தினமும் கோட்டூர்புரத்தில் இருந்து இந்திரா நகர் வரை பறக்கும் ரயிலில் பயணம் செய்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 2 ம் தேதி கோட்டூர்புரத்தில் இருந்து திருவான்மியூருக்கு ரயிலில் சென்றார் ப்ரீத்தி. கோட்டூர்புரம் ரயில் நிலையத்தில் இருந்து, இந்திரா நகர் ரயில் நிலையத்தில் இறங்கும்போது அடையாளம் தெரியாத நபர்கள் செல்போன் பறிக்க முயன்றுள்ளார்கள்.

இதில் நிலைதடுமாறி ப்ரித்தி விழுந்துள்ளார். ப்ரீத்திக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ப்ரித்தி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இது குறித்து ப்ரீத்தியின் உறவினர்கள் கூறுகையில், செல்போன் பறிக்க முயன்ற நபரிடமிருந்து தப்பிக்க ப்ரீத்தி முயன்றபோதுதான் நிலை தடுதாறி கீழே விழுந்ததாக அவரது உறுவனர்கள் கூறும் நிலையில், தப்பியடியோ திருடனை பிடிக்க முடியாமல் வழக்கை முடிக்பதற்காக ரயில்வே போலீசார் விபத்து என வழக்கு பதிவு செய்திருப்பதாக உறுவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வழக்கில்
பட்டிணம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ்(27)
அடையாறு பகுதியை சேர்ந்த மணிமாறன் ஆகிய இருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த இரண்டு நபர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *