அ.தி.மு.க. கொடி, இரட்டை இலையை பயன்படுத்தும் பன்னீர்செல்வம் தரப்பினர்மீது சட்டப்படி நடவடிக்கை !

Advertisements

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. கொடி, இரட்டை இலை, லெட்டர் பேடு ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்தி வருவது மோசடி செயலாகும். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அ.தி.மு.க. அரசு விசாரணை நடத்தியது. வழக்கு நடந்து வரும் நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக விசாரணை தாமதம் ஆனது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

Advertisements

அதன் பிறகு இந்த வழக்கு உயர் போலீஸ் அதிகாரியிடம் இருந்து பதவி குறைந்த அதிகாரிக்கு மாற்றப்பட்டது. குறைந்த பதவி வகித்தவர் இதனை விசாரித்து வந்தார். எதற்காக மாற்றப்பட்டது? இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *