திணறும் விஜய் மகன் சஞ்சய்? கதை கேட்டு எஸ்கேப் ஆகும் நடிகர்கள்!

Advertisements

Vijay Son Jason Sanjay : நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக உள்ள திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க முன்னணி நடிகர்கள் மறுப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் பிலிம் மேக்கிங் படித்து முடித்ததும் சில குறும்படங்களை இயக்கினார். விஜய்க்கு தனது மகனைத் தன்னை போல் ஹீரோவாக நடிக்க வைக்க விருப்பம் இருந்தது. இதற்காகக் கதையெல்லாம் கேட்டு வந்தார். குறிப்பாகப் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சொன்ன கதை விஜய்க்கு மிகவும் பிடித்துப் போக, அதில் தன் மகன் நடித்தால் சூப்பராக இருக்கும் என எண்ணி, அவரிடம் இந்தத் தகவலைக் கூறி இருக்கிறார்.

ஆனால் ஜேசன் சஞ்சய் தனக்கு நடிப்பில் ஆர்வமில்லையெனக் கூறிவிட்டதால் மகனை ஹீரோவாக்கும் முயற்சியைக் கைவிட்டார் விஜய். நடிப்பில் ஆர்வம் இல்லாவிட்டாலும் இயக்குனர் ஆக விரும்பிய ஜேசன் சஞ்சய், சைலண்டாக அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு முதல் வாய்ப்பை லைகா நிறுவனம் வழங்கியது. அதன்படி ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள முதல் தமிழ் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகக் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது.

விஜய் மகன் இயக்க உள்ள படம்குறித்த அறிவிப்பு வெளியாகிக் கிட்டத்தட்ட ஓராண்டு ஆகப்போகிறது. ஆனால் அப்படம் குறித்த அடுத்தக்கட்ட அப்டேட் இதுவரை வெளியாகவில்லை. லேட்டஸ்ட் தகவலின் படி தன் படத்திற்கு ஹீரோ கிடைக்காமல் ஜேசன் சஞ்சய் திண்டாடி வருவதாகக் கூறப்படுகிறது. முதலில் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி, துருவ் விக்ரம் ஆகியோரது பெயர்கள் அடிபட்டது. பின்னர் கவினை சந்தித்து ஜேசன் சஞ்சய் கதை சொன்னதாகச் செய்திகள் வெளியானது.

கவினும் சமீபத்திய பேட்டியில் அதை உறுதி செய்திருந்தார். ஆனால் அனைவருமே கதை கேட்ட கையோடு நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. ஜேசன் சஞ்சய் தன் படத்தில் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறாராம். ஏனெனில் அவர்கள் நடித்தால் படத்தின் பிசினஸுக்கு அது பலமாக அமையும் என அவர் கருதுகிறாராம். ஆனால் டாப் நடிகர்களோ, அனுபவம் இல்லாத ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கத் தயங்குகிறார்களாம். விஜய் மகன் என்பதால் மரியாதைக்காகக் கதை மட்டும் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. படம்குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் ஆகப்போகும் நிலையில் ஹீரோ கிடைக்காமல் சஞ்சய் திணறி வருவதால் அவரது படம் ஒரு இன்ச் கூட நகராமல் இருக்கிறதாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *