Viral video: கியாஸ் சிலிண்டரை வைத்துப் பெண சாகசம்!

Advertisements

கியாஸ் சிலிண்டரை தலையில் வைத்துப் பெண் நடனமாடி சாகசம்!

பெண் ஒருவர் தலையில் கியாஸ் சிலிண்டரை வைத்துக் கொண்டு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமாவில் ஹிட் ஆகும் பாடல்களுக்கு இளம்பெண்கள் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் வெளியிடுவது அதிகரித்து வருகிறது. ஆனால் சற்று வித்தியாசமாகப் பெண் ஒருவர் தலையில் கியாஸ் சிலிண்டரை வைத்துக் கொண்டு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், கியாஸ் சிலிண்டரை தலையில் சுமந்தபடி நடனமாடும் பெண் அதோடு நிறுத்தவில்லை. மாறாக அந்தப் பெண் தலையில் சிலிண்டர் இருக்கும் போதே உருளை வடிவ ஸ்டீல் பாத்திரத்தின் மீது ஏறி நடனமாடுகிறார். அதோடு அந்தப் பாத்திரத்தின் மீது நின்றவாறே தலையில் சிலிண்டருடன் ஒற்றை காலைத் தூக்கி சாகசம் செய்தும் அசத்துகிறார்.

இந்த வீடியோ வைரலாகி 28 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், ஏன் இது போன்று பாதுகாப்பற்ற சாகசங்களை வீட்டில் செய்கிறீர்கள்? நீங்கள் உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து உங்கள் உயிரை ஏன் பணயம் வைக்க வேண்டும்? பாதுகாப்பாக இருப்பது நல்லது, யாரும் இது போன்ற செயல்களைச் செய்ய வேண்டாமெனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *