Village style: சுட்ட மாங்காய் ரசம்!

Advertisements

கிராமத்து ஸ்டைலில்  சுட்ட மாங்காய் ரசம்!

கிராமத்து சுவையில் ஒரு அருமையான ரசம் ரெசிபியை பற்றித் தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். ரசம் பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்த உணவு தான். முன்பெல்லாம் எந்த உணவைச் சமைத்தாலும் ரசம் நிச்சயம் இருக்கும். இப்போது அப்படியெல்லாம் செய்ய முடிவதில்லை என்றாலும் எப்போதாவது வைக்கும் சுட்ட மாங்காய் ரசத்தை இதுபோல வைத்துப் பாருங்க இனி அடிக்கடி வைப்பீர்கள்.

தேவையான பொருட்கள்:

பச்சை மாங்கா – 1,
பூண்டு – 5 பல்,
இஞ்சி -1 துண்டு,
பழுத்த தக்காளி – 1,
கருவேப்பிலை -1 கொத்து,
கொத்தமல்லி -1 கைப்பிடி,
பச்சை மிளகாய் – 3,
கடுகு – 1 டீஸ்பூன்,
சீரகம் -1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்,
பெருங்காயம் -1/4 டீஸ்பூன்,
உப்பு -1/2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

 


செய்முறை:

இந்த ரசம் செய்ய முதலில் மாங்காவை அடுப்பு தனலில் நன்றாகச் சூடு படுத்த வேண்டும். அதற்குக் கேஸ் ஸ்டவ் மீது ஒரு இரும்பு வலை போன்ற கம்பியை வைத்து அதன் மேல் மாங்காய் வைத்து நன்றாகச் சூடு படுத்துங்கள். இந்தக் கம்பி இல்லை என்றால் இடிக்கி போன்ற ஏதாவது பொருளினால் இருக்க மாங்காயை பிடித்துச் சுட வேண்டும்.

அப்படி செய்யும்போது மாங்காய்யில் மேல் உள்ள பச்சை நிற தோல் முழுவதுமாகக் கருப்பு நிறமாக மாறும் வரை சூடு படுத்த வேண்டும். அதன் பிறகு இந்த மங்காவை சிறிது நேரம் சூடு ஆறும் வரை ஒரு தட்டில் வைத்து ஆற விடுங்கள். மாங்காய் நன்றாகச் சூடு ஆறிய பிறகு அதன் மேல் இருக்கும் தோலை எல்லாம் உரித்துத் தனியாக எடுத்து விட்டால் உள்ளே நன்றாக மாங்கா வெந்து கிடைக்கும்.

இதை ஒரு பவுலில் சேர்த்து கைகளாலே நன்றாக மசித்து கொள்ளுங்கள். இப்படி மசிக்கும் போதே கொட்டையைத் தனியாக வந்து விடும். அதை எடுத்து விட்டு இந்தப் பிசைந்த மாங்காவுடன் நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். மேல குறிப்பிட்டுள்ள மசாலா பொருட்களைச் சேர்த்து  நன்றாகச் சூடு  படுத்தினால் சுவையான சுட்ட மாங்காய் ரசம் ரெடியாகிவிடும்.இதனைச் சாதத்தில் ஊற்றிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *