vijay’s goat’ movie:விஜய் சம்பந்தப்பட்ட விஎப்எக்ஸ் பணிகள் நிறைவு!

Advertisements

‘கோட்’ படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட விஎப்எக்ஸ் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

சென்னை:நடிகர் விஜய் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட்) படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமெனப் படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதில் விஜய் இளமையான தோற்ற வேடத்தில் நடிக்கிறார். இதற்காக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது மீண்டும் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் கடந்த வாரம் வெளிநாடு புறப்பட்டுச் சென்றார். மேலும் அமெரிக்காவில் நடந்து வரும் ‘கிராபிக்ஸ்’ பணிகளைப் பார்வையிட இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அங்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இயக்குனர் வெங்கட்பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதனுடன், கோட் படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட விஎப்எக்ஸ் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்த அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலேசியாவில் விரைவில் இப்படத்திற்கான இசைவெளியீட்டு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *