VidaaMuyarchi: படப்பிடிப்பு ஆரம்பம்!

4ம் தேதி விடாமுயற்சி படப்பிடிப்பு ஆரம்பம்!

சென்னை: விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு, அபுதாபியில் வரும் அக்டோபர் 4ம் தேதி தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் பல ஆண்டுகளுக்குப் பின் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாகத் திரிஷா நடிக்கப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தப்படத்தில்அஜித்துக்கு வில்லனாக நடிக்கப் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்யிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்முலம் அஜித்துக்கு ஜோடியாக 5வது முறையாகத் திரிஷா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், தயாரிப்பு தரப்பில் சில சிக்கல் ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு துவங்கவில்லை.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு, அபுதாபியில் வரும் அக்டோபர் 4ம் தேதி தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு, அஜித், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க உள்ளார்களாம். அஜித் ஓரிரு நாட்களில் துபாய் கிளம்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *