துணை ஜனாதிபதிக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு.!

மதுரையில் துணை ஜனாதிபதிக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கி நலம் விசாரித்தார்.

தமிழ்நாட்டிற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மதுரையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிலையில், மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்க வந்தார்.

அப்போது அவர், துணை ஜனாதிபதி தங்கிருப்பதை அறிந்து, நேரில் சென்று சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து, அவருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

இதையடுத்து, இருவரும் நலம் விசாரித்தனர். இந்த சந்திப்பின் போது, நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அமைச்சர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், நம் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் துணை ஜனாதிபதியாக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டுக்கும், இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *