தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் மரணம்!

Advertisements

1997 ஆம் ஆண்டு வெளிவந்து பெரிய ஹிட் கொடுத்த ரோஜா மலரே படத்தை இயக்கி டைரக்டராகவும் தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

பிரபல தயாரிப்பாளர் டி.எம்ஜெயமுருகன் திடீரென மாரடைப்பு காரணமாக உயிர்ழந்துள்ளார். இதைக் கேட்டுத் திரையுலகினர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

ஜெயமுருகன், முதன்முதலில் மன்சூர் அலிகானை வைத்து 1995 ஆம் ஆண்டு சிந்து பாத் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறுமுகமானார். அதைத் தொடர்ந்து பெரிய ஹிட் கொடுத்த ரோஜா மலரே படத்தை இயக்கி டைரக்டராகவும் தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

முரளி ஹீரோவாக நடித்த இந்தப் படம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்து பட்டி தொட்டியெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் அருண் பாண்டியன், ஆனந்த் பாபு, செந்தில் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடந்து அவர், அடடா என்ன அழகு, தீ இவன் போன்ற திரைப்படங்களையும் இயக்கினார். இந்தப் படங்களை இயக்கியது மட்டுமன்றி இசையமைப்பளராகவும் இருந்தார்.

சில படங்களில் இவர் நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர் என்று பன்முக திறமைகளைக் கொண்ட ஆளுமையாகத் திரையுலகில் வலம் வந்தவர் ஜெயமுருகன்.

இவரின் சினிமா பங்களிப்பை இன்றளவும் தவிர்க்க முடியாத தடம் பதித்தவர். தன்னுடைய இறுதி காலகட்டத்தை சொந்த ஊரான திருப்பூரில் கழித்து வந்தார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிந்துள்ளார்.

இவருடைய இறுதி சடங்குகளும் திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் நடைபெறும் என்று கூறியுள்ளனர். இவரின் இறப்பு செய்தி கேட்டு திரை பிரபலங்கள் மட்டுமன்றி ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர்.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *