Vairamuthu: இந்தி மொழியைத் திணிக்காமல் தமிழுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்!

இந்தி மொழியைத் திணித்துத் தமிழர்களுக்கு அச்சத்தை கொடுக்காமல் பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென மத்திய அரசைக் கவிப்பேரரசு வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.

திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மேலும் இந்நிகழ்வில் மதன் கார்க்கி உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வைரமுத்து, ஆண்டுக்கு ஆண்டு திருவள்ளுவர் திருநாளுக்கு பெருகி வரும் திருவள்ளுவரின் செல்வாக்கு பெருகுவதை காட்டுகிறது.

திருவள்ளுவர் பண்பாட்டின், வரலாற்று அடையாளம்.கடந்த வாரம் அதிகம் பேசப்பட்ட இரு மொழி கொள்கைகுறித்து பேசப்பட்டது.திருக்குறளை படிக்கும்போது நாங்கள் தமிழையே படிக்கிறோம்.மும்மொழி கொள்கை என்பது திணிப்பு என்பது தமிழர்களின் தீர்க்கமான எண்ணம். இந்தி மொழி திணிப்பை வேண்டாம் என்கிறோம்.

*இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள்*.இங்கிருந்து வட மாநிலத்திற்கு செல்வர்கள் இந்தியை கற்றுக் கொள்கிறார்கள் அங்கிருந்து இக்கு தொழிலுக்காக வருபவர்கள் தமிழை கற்றுக் கொள்கிறார்கள். மூன்றாவது மொழி என்பது சூழலால் வருவது.

தாய்மொழி பண்பாட்டு மொழி ஆங்கிலம் நாகரிக மொழி. ஒரு மனிதன் பண்பாட்டுடன் நாகரிகத்துடன் திகழ தமிழ், ஆங்கிலம் போதும்.இந்தி மொழிமீது அச்சம் உள்ளது. வட மொழி கலக்கும்போது எல்லாம் தமிழ் கலப்படம் ஆகிறது.

எப்படி கரையான் புகுந்து ஒரு மரத்தை அரிக்கிறதோ, அதுபோல் வடமொழி நிலத்தை அரித்து விட்டது.அப்படி நாங்கள் அதிகம் இழந்து இருக்கிறோம், இனியும் எங்கள் மொழியையும், நிலத்தையும், இனத்தையும் இழக்க தயாராக இல்லை.இந்தி மொழிமீது எங்களுக்குக் கோபம் இல்லை. அச்சம் உள்ளது. இந்த நியாயமான அச்சத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தி மொழியைத் திணித்துத் தமிழர்களுக்கு அச்சத்தை கொடுக்காமல் பாதுகாப்பை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.திருக்குறளை நாள்தோறும் தமிழர்கள் தங்கள் வீடுகளில் ஓத வேண்டும்‌ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *