V. Senthil Balaji: மருத்துவ அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்!

Advertisements

அமைச்சர் செந்தில் பாஜியின் ஜாமீன் மீதான விசாரணை  வரும் செவ்வாயன்று நவம்பர் 28 -ஆம் தேதி வரவுள்ள  நிலையில், அவரது மருத்துவ அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது செந்தில்பாலாஜி தரப்பு.

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையின்  நடவடிக்கையால் ஜூன் 14- ஆம் தேதி  கைது செய்யப்பட்டு தற்போது சென்னை புழல் சிறையில் உள்ளார். பலமுறை ஜாமீன் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்து விட்டது. இதனால் அமைச்சர் தரப்பு உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுமீதான விசாரணை வரும் செவ்வாயன்று  நவம்பர் 28-ஆம் தேதி வரவுள்ளது

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலை  சரியில்லை என்பதால் சிகிச்சைக்காக  சென்று வந்தாலும்  நாளுக்கு  நாள் அவரது உடல்நிலை  மிக மோசமடைந்து வருகிறது. இதனையடுத்து அவரை சில நாட்களுக்கு முன்பு சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, மற்றும் சென்னை பல்நோக்கு மருத்துவமனையான ஓமந்தூரார் மருத்துவமனையிலும்   சிகிச்சை பெற சென்றார்.  சில மாதங்களுக்கு முன் அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது அவருக்கு உடல்நிலை சரியிலாமல் போனது. தற்போது ஓமந்தூரார் மருத்துவமனையில்  எடுக்கப்பட்ட உடல் பரிசோதனையில் பித்தப்பையில் கல் இருப்பதாகவும், மூளைக்கு செல்லும்  ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான தரமான சிகிச்சை உடனடியாகத் தேவைப்படுகிறது.

அது தவறும் பட்சத்தில், மூளையில் ரத்தஓட்டம் நின்று STROKE  எனப்படும் மூளை செயலிழக்கும் வாய்ப்புகள் ஏற்படும்  என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மருத்துவர்களின் அறிக்கையானது உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து  செந்தில்பாலாஜி  தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *