Transfer of Officers: 3 அதிகாரிகள் இடமாற்றம்!

மதுசூதன் ரெட்டி, முதல்-அமைச்சரின் முகவரித் துறையின் சிறப்புப் பணி அதிகாரியாக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் சங்கர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சிறப்புச் செயலாளராக மாற்றப்பட்டார்.

தமிழ்நாடு சாலைப் பிரிவு திட்டம்-2 திட்ட இயக்குனர் எஸ்.பிரபாகர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

‘சர்வே மற்றும் செட்டில்மென்ட்’ இயக்குனர் மதுசூதன் ரெட்டி, முதல்-அமைச்சரின் முகவரித் துறையின் சிறப்புப் பணி அதிகாரியாக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *