Advertisements

அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு விசா காலம் குறித்து அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விசாவில் உள்ள கால அவகாசம் முடிந்தும் இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள நிரந்தரத் தடையை எதிர்கொள்ள நேரிடும் என்று பதிவிட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வரும்நிலையில், டிரம்பின் இந்த புதிய அறிவிப்பால் அமெரிக்காவில் வசித்து வரும் 45 லட்சம் இந்தியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisements


