
தென்மேற்கு வங்கக் கடல், அதையொட்டிய தென்னிலங்கை, இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுவதால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 28ஆம் நாள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 29ஆம் நாள் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


