Advertisements

---------- Forwarded message --------- From: Arul mozhi S.S<r.r.arulrhythms@gmail.com> Date: Tue, 12 Dec 2023, 14:57 Subject: To: <sharinggem@gmail.com> மேஷம்

முயற்சியை கைவிடாத மேஷ ராசிக்காரர்களே வியாபாரப் பணிகளில் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் வழியில் லாபம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பொன், பொருள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் லாபம் உண்டு வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். குலதெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். இன்று முருகப்பெருமானை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 7.
ரிஷபம்

நிதானத்தை கடைபிடிக்கும் ரிஷப காரர்களே இன்று பொறுமையுடன் செயல்படவும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பிடிவாதத்தை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வழக்குகளில் இழுபறியான சூழல் ஏற்படும். இன்று நவகிரக வழிபாட்டால் இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 6.
மிதுனம்

உண்மை உழைப்பு உயர்வு இவை பெரிதேன எண்ணும் மிதுன ராசிக்காரர்களே பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். தடைபட்டு வந்த ஒப்பந்தப் பணிகள் சாதகமாகும். கடன் சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். இன்று காளிதேவியை வணங்கி வர இனிதான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 3.
கடகம்

தானாக வந்து சேர்ந்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத கடக ராசிக்காரர்களே,
அலுவலகப் பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். தனவரவுகளால் கையிருப்புகள் மேம்படும். பணி சார்ந்த சில நுணுக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள். மேலும் இன்று நீங்கள் அனுமனை வழிபட இனிய நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 2.
சிம்மம்

விடாமுயற்சி உடைய சிம்ம ராசிக்காரர்களே குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தடைபட்ட சில வேலைகள் நிறைவுபெறும். விலகிச் சென்றவர்கள் சாதகமாக இருப்பார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். குலதெய்வத்தின் அருளால் பல காரியத்தை சாதிப்பீர்கள். மேலும் இன்று வீரபத்திரரை வழங்கி வர இனிய நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 6.
கன்னி

இயல்பான குணம் கொண்ட கன்னி ராசிக்காரற்களே நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆன்மிகப் பெரியோர்களின் சந்திப்பு ஏற்படும். உடனிருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.
மேலும் என்று நீங்கள் அம்பிகையை வழிபட இனிய நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 7.
துலாம்

எதையும் சரிசமமாக நோக்கும் துலாம் ராசிக்காரர்களே வியாபாரப் பணிகளில் விவேகம் வேண்டும். உடனிருப்பவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். செலவுகளால் கையிருப்புகள் குறையும். எண்ணிய பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். மேலும் என்று நீங்கள் வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மேலும் என்று நீங்கள் பெருமாளை வணங்கி வர இனிய நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 4.
விருச்சிகம்

பேச்சாற்றல் மிகுந்த விருச்சிக ராசிக்காரற்களே எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை அறிவீர்கள். மனதளவில் சில மாற்றமான சூழல் ஏற்படும். மேலும் என்று நீங்கள் நரசிம்மரை வணங்கி வர இனிய நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 9.
தனுசு

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்ற எண்ணம் கொண்ட தனுசு ராசிக்காரர்களே மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வழக்கு சார்ந்த செயல்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். உத்தியோக பணிகளில் ஆர்வம் ஏற்படும். பொது வாழ்க்கையில் சில மாற்றம் அமையும். பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். மேலும் என்று நீங்கள் லட்சுமிதேவியை வணங்கி வர இனிய நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 1.
மகரம்

அடுத்தவர் உயர்வில் மகிழ்ச்சியை காணும் தனுசு ராசிக்காரர்களே உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். விவசாயப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் புதுமைகள் பிறக்கும். அதிகாரப் பொறுப்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மேலும் என்று நீங்கள் சித்தர்கள் வழிபாடு செய்ய இனிமையான நாளாக அமையும் என்று அதிர்ஷ்ட எண் 6.
கும்பம்

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உடைய கும்ப ராசிக்காரர்களே இன்று நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நினைத்த சில காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். தாயாருடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் லாபம் அதிகரிக்கும். பணிகளில் இழுபறியான சில வேலைகள் முடியும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் சூழல் உருவாகும் . மேலும் இன்று நீங்கள் விநாயகரை வணங்கி வர இனிதான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 8.
மீனம்

பிறர் மனம் கோணாமல் பழகும் மீன ராசிக்காரர்கள்வியாபாரத்தில் இழுபறியான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சொத்து பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்று ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கி வர இனிதாக நாளாக அமையும் என்று அதிர்ஷ்ட எண் 6.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

