Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 10.01.2024

Advertisements
மேஷம்

 

மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையை கடைப்பிடித்தால் மிகவும் நல்லது. புதிய முயற்சிகளில் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படவும். இனிவரும் காலங்களில் கலைஞர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.  உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. இன்று பெருமாளை வழிபட சிறந்த நாளாக இருக்கும். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! கணவன் மனைவி இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் வந்து போகும். விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. இன்று உங்களுக்கு பண வரவுக்கு பஞ்சமில்லை .வழக்கமான பணிகளில் மிகுந்த கவனத்துடன் ஈடுபடவும். பேச்சில் சற்று கவனம் தேவை. இன்று நீங்கள் வெங்கடாஜலபதியை வணங்கி வர நல்ல நாளாக அமையும். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

 

மிதுனம்

 

மிதுன ராசி அன்பர்களே! மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுப காரியங்களின் பேச்சு வார்த்தைகளை தொடங்கினால் இனிமையாக முடியும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். இன்று அம்மனை வழிபட்டு வர இனிமையான நாளாக அமையும். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

கடகம்

 

கடக ராசி அன்பர்களே! உங்கள் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் .சிலருக்கு உறவினர்கள் வருகையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. புதிய நண்பர்களால் லாபம் உண்டு .வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் அனைத்தும் அனுகூலமாக அமையும். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். இன்று அம்மனை வழிபட்டு வர சிறப்பு. இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

 

சிம்மம்

 

சிம்மராசி அன்பர்களே! மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும் .குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும். தாய்மாமன் வழியில் சுபச் செய்தி வரும். இன்று உங்களுக்கு திடீர் பணம் வரவு உண்டு. புதிய அறிமுகத்தால் உங்களுக்கு பல நன்மைகள் நடக்கும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வணங்கி வர இந்த நாள் நல்ல நாளாக அமையும் .இந்த நாள்  இனிமையான நாளாக அமைய வாழ்த்துக்கள்.

கன்னி

 

கன்னி ராசி அன்பர்களே! இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.  நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு
 வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். வீடு மனை வாங்க ஏற்ற நாள் .பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்க வாய்ப்பு உண்டு. பெருமாளை வணங்கி வர சிறப்பாக அமையும். இந்த நாள் நல்ல நாளாக அமைய வாழ்த்துக்கள்.

 

துலாம்

 

துலாம் ராசி அன்பர்களே! எடுத்த காரியங்கள் அணுகுலமாக முடியும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும் .தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சியுடன் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் விஷயத்தில் நல்ல  முன்னேற்றம் ஏற்படும். இன்று நீங்கள் சாந்தநாயகியை வணங்கி வர சிறப்பாக அமையும். இந்த நாள் இனிமையான நாளாக அமைய வாழ்த்துக்கள்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசி அன்பர்களே! உறவினர்கள் வகையில் புதிய ஆடை ஆவணங்களின் சேர்க்கை உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது சற்று எச்சரிக்கையாக இருக்கவும். கணவன் மனைவியிடையேஅன்னியோன்யம் அதிகரிக்கும். மார்க்கெட்டிங் மற்றும் நடைபாதை வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. இன்று நீங்கள் முருகப்பெருமானை வணங்கி வர வாழ்க்கை சுகமாக அமையும். இந்த நாள் இனிமையான நாளாக அமைய வாழ்த்துக்கள்.

 

தனுசு

 

தனுசு ராசி அன்பர்களே! நீங்கள் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும் சுயமரியாதைக்கும் கட்டுப்பட்டவர்கள் என்று அனைவருக்கும் தெரியும். நீங்கள் திட்டமிட்டபடி உங்கள் செயல்களை செய்து முடிப்பீர்கள் .பிள்ளைகள் விஷயத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அனைவரிடத்திலும் அன்பாக பழகுங்கள். இன்று நீங்கள் பெருமாளை வணங்கி வர வாழ்க்கையில் பெருமைப்படுவீர்கள். இந்த நாள் இனிமையான நாளாக அமைய வாழ்த்துக்கள்.

 

மகரம்

 

மகர ராசி அன்பர்களே! எதிர்பாராத பணம் வரவு உங்களுக்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு. வரவுக்கு ஏத்த செலவுகளும் உண்டாகும். தங்க நகைகள் வாங்க வாய்ப்பு உண்டு. திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை உங்களுக்கு சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை .வாழ்க்கை துணையால் மதிப்பு உண்டாகும். இன்று நீங்கள் பெருமாளை வணங்கி வர இந்த நாள் நல்ல நாளாக அமையும். இந்த நாள் சிறப்பான நாளாக அமைய வாழ்த்துக்கள்.

கும்பம்

 

கும்ப ராசி அன்பர்களே! ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே உங்களுக்கு வந்து சேரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். புதிய பாதை புலப்படும் நாள். வீடு இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். இன்று உங்களுக்கு உறவினர்களால் திடீர் பணவரவு உண்டு. வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். இன்று நீங்கள் ஐயப்பனை வணங்கி வர சிறப்பான நாளாக அமையும். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

 

மீனம்

 

மீனராசி அன்பர்களே! உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். உங்கள் முயற்சியால் லாபம் காண்பீர்கள் .வியாபாரத்தில் நீங்கள் வெற்றி நடை போடுவீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். வெளிநாட்டு சம்பந்தமான செய்திகள் உங்களுக்கு வெற்றிகரமாக அமையும் .உடல் நிலையில் இருந்து வந்தபாதிப்பு நீங்கும். இன்று குலதெய்வ வழிபாடு மேன்மை தரும். இந்த நாள் சிறப்பான நாளாக அமைய வாழ்த்துக்கள். மீண்டும் நாளை சந்திப்போம்.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *