today rain:12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Advertisements

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் 19-ம் தேதிவரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *