இன்றைய தங்கம், வெள்ளி மற்றும் பங்குச் சந்தை நிலவரம் குறித்து பார்ப்போம்.!

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ஒரு இலட்சத்து 19  ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரன் 520 ரூபாய் குறைந்து, ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 1 இலட்சத்து 30 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 387 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 3 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மும்பைப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 213 புள்ளிகள் குறைந்து, 81 ஆயிரத்து 325 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீட்டு எண் நிஃப்டி 48 புள்ளிகள் குறைந்து, 25 ஆயிரம் புள்ளிகளில் வணிகமாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *