
திருவொற்றியூரில் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர் விஜயை கைது செய்ய வலியுறுத்தி ஒட்டிய போஸ்டரை கிழித்து எரிந்த தவெக நிர்வாகிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக மட்டுமல்லாமல் இந்தியாவையே கவலைக்கு உள்ளாக்கியது.
மேலும், பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் உட்பட மாவட்ட நிர்வாகிகள் என பலர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது. சிலரை போலீசார்களால் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், வடசென்னை, திருவொற்றியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விஜயை கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி, புரட்சிகர இளைஞர் முன்னணி என்ற அமைப்பினர் போஸ்டர்கள் ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், போஸ்டர் ஒட்டப்பட்ட தகவலை அறிந்து கொண்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், போஸ்டர் ஒட்டப்பட்ட இடங்களை தேடி தேடி கிழித்து எரிந்தனர்.
