
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா நேரில் பார்வையிட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக அரசுக் குழு அமைத்து ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.அதன் பின்பு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் பார்வையிட்டார்.
இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய முடிவு செய்தார். அதன்படி இன்று காலை முதலில் மறவன் மடம் பகுதியில் உள்ள வெள்ளத்தால் ஏற்பட்ட ரோடு அரிப்பு பகுதிகளைப் பார்வையிட்டார். அதன் பின்பு அந்தோணியார் புறத்தில் ஆய்வு செய்தார்.
அதன் பிறகு பைபாஸ் ரோட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதாரத்தை பார்வையிட்டார். அதன் பின்பு தமிழ் சாலையில் ரோட்டில் தேங்கியுள்ள மழை நீரில் நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு இருந்த போதும் மக்கள் ஓடையில் தூர்வார வேண்டும் தூர் வாராமல் இருப்பதால் மழை நீர் ஊருக்குள் வந்துவிட்டது அதுபோல ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும் சில இடங்களில் பாலம் உடைந்ததால் ஊருக்குள் வெள்ளநீர் வராமல் சில இடங்களில் பாதிப்பு குறைவாக ஏற்பட்டது என்றும் பொதுமக்கள் கூறினார்கள். பொதுமக்கள் கூறும் கருத்துக்களை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா கேட்டறிந்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து பல பகுதிகளில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.


