Thol. Thirumavalavan Nomination: அதிமுக முன்னாள் எம்பி மனு நிராகரிப்பு.. திருமாவளவன் மனு ஏற்பு!

Advertisements

திமுக கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிm நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சி ராணி கட்சி வேட்பாளர் நீலமேகம் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதிமுக முன்னாள் எம்பி மனு நிராகரிப்பு சுயேட்சையாகப் போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது. மேலும் சுழற்சி வேட்பாளர்களான ராமுகாந்தி, பூரணகுமார், சாமிநாதன், சந்திரகாசி, ராஜேஷ் ஆகிய ஐந்து சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் உரிய ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டதாகச் சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆனி மேரி ஸ்வர்ணா அறிவித்தார்.

மேலும் பிரதான வேட்பாளர்களான அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் அவர்களின் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த அதிமுக ராஜ்குமார், பாஜக  பிருந்தா, நாம் தமிழர் கட்சி இரஞ்ஞினி ஆகியோரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து தற்பொழுது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளர்களாக ஐந்து பேரும் சுயாட்சிகளாக  9 பேரும் சேர்த்து மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *